இஸ்லாமும் இளமைப் பருவமும்
ஆசிரியர் : மௌலவி. அ. முஹம்மது கான் பாகவி
முஸ்லிம்களின் இளைய தலைமுறை மட்டுமன்றி பொதுவாக எல்லா சமூகத்தின் இளைய தலைமுறையினரும் இன்றைக்குச் சமூகக் கட்டுப்பாடுகளையோ, மூத்தோர் சொற்களையோ பொருட்படுத்துவதே இல்லை. தொழில்நுட்பங்களால் விளைந்த அற்ப சுகங்களுக்கு அடிமையாகி மனம்போன போக்கில் வாழ்க்கை நடத்துகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளும் கெட்ட விளைவுகளும் நாளுக்கு நாள் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டுள்ளன. மூத்தவர்கள் வாய்மூடி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.
நல்வழி காட்டி, கை கொடுத்து காப்பாற்றத் தவறினால் இளைய தலைமுறையின் சீரழிவால் அனைத்தும் சீர்குலைந்து போகும்.
இந்நூல், ஒவ்வொரு கட்டத்திலும் இளவல்கள் சந்திக்கும் மேடுபள்ளங்களைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி
நல்ல தலைமுறையாக உருவாக வழி சொல்கிறது. அனைவரும் குறிப்பாக இளவல்கள் நிதானமாக வாசியுங்கள்! அசைபோடுங்கள்!
Reviews
There are no reviews yet.