வரலாற்று வெளிச்சத்தில் கஜினி முஹம்மது
— அஹமது சேக்–
வரலாற்றாய்வாளர்
ரொமிலா தாப்பர் தனது ஆய்வின் மூலமாக எழுதிய நூலின் வழியாக
கஜினி முஹம்மதை போர் படையை வழிநடத்தும் சிறந்த
மாமன்னராகவும், செல்வத்திற்கான படையெடுப்பாளராகவும்
உணர முடிகிறது.
முஸ்லிம் வரலாற்றாய்வாளர்களில்
பலரும் கஜினி முஹம்மதுவை
வரம்பு மீறி உயர்த்தி பிடிப்பதை மறுக்கும் வரலாற்றுச்
செய்திகளும் பல உண்டு. அதே வேளையில் ஆக சிறந்த இஸ்லாமிய அறிஞர்களின் குறிப்புகளும் இம்மன்னர் குறித்து கிடைத்த வேளையில் நிதானமாகவும் நீதமாகவும்
செய்திகளை உற்று நோக்க வேண்டிய பொறுப்பு நம் மீது விழுகின்றது.
ஆக ஒரு வரலாறு பலரின் கண்ணோட்டத்திற்கேற்ப மாறுபடுகின்றது என்பது தான் உண்மை.
கஜினி முஹம்மது குறித்து மக்கள்
மத்தியில் உருவாக்கப்பட்ட தவறான பொது புத்தியை தகர்த்து யதார்த்த உண்மை எதுவென்பதை பக்க சார்பின்றி கொடுப்பதே இந்த நூலின் நோக்கம்.
Reviews
There are no reviews yet.